ரஷ்யா-உக்ரைன்:சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதையடுத்து, உக்ரைன் சுதந்திரம் பெற்றுத் தனி நாடாகச் செயல்பட்டு வருகிறது. உக்ரைனின் எல்லைகளில் கிழக்குப் பகுதியை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 2014 முதல் போர் சூழல் நிலவி வருகிறது. ரஷ்யா தனது எல்லையில் ராணுவப் படைகளைக் குவித்து வந்ததுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.
நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய இருப்பதையும், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் தங்கள் படைகளை உக்ரைன் எல்லைக்கு அனுப்புவதையும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனை இரண்டாக உடைத்த புடின் தற்போது உக்ரைனின் கிழக்கு எல்லைப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. நேற்று உக்ரைனின் சிறிய ரக குண்டுகள் ரஷ்ய எல்லையில் போடப்பட்டதாகவும், அதன் மூலம் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ரஷ்யத் தரப்பு தெரிவித்துள்ளது. உக்ரைனின் ராணுவ வீரர்கள் சிலர் ரஷ்யப் படையால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அமைதியை நிலைநாட்ட புடின் உத்தரவு
ரஷ்ய அதிபர் நேற்று (பிப்ரவரி 21) உக்ரைனை இரண்டு மகானங்களாக பிரித்து, கிழக்கு உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யப் படைகளை எல்லைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ரஷ்யா- உக்ரைன் இடையே போர் தொடங்கியது என உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது. இதனையடுத்து ஐக்கிய நாடுகளின் அவசரக் கால கூட்டம் உக்ரைனில் நடத்த அமெரிக்க அழைப்பு விடுத்துள்ளது.
எல்லையில் குவியும் ராணுவ படைகள் பிரிக்கப்பட்ட புதிய உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க முதலீடு மற்றும் வர்த்தகத்தைத் தடை செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவின் இந்த போக்கை ஐக்கிய நாடுகள் சபையும் சில உலக நாடுகளும் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்தியாவின் நிலைப்பாடு
அமைதியான - ஆக்கப்பூர்வமான ராஜதந்திரம்' காலத்தின் கட்டாயம் என்றும், பதற்றத்தை அதிகரிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா சார்பில் பிப்ரவரி 17இல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உக்ரைனில் வாழும் இந்தியர்களை உடனடியாக நாட்டிற்குத் திரும்பஇந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. தூதரக உறுப்பினர்களின் குடும்பங்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உக்ரைன் விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்ற ரஷ்யா!