அமெரிக்காவின் ’பெரு’ மாகாணத்தில் எட்கர்டோ ரெபக்லியாட்டி மார்டின்ஸ் நேஷனல் மருத்துவமனை (Edgardo Rebagliati Martins National Hospital) உள்ளது. இங்கு கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அதீத பாதுகாப்பு வசதிகளுடன்தான் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. குறிப்பாக பெண்களின் பிரசவத்தின்போது மகளிர் மருத்துவ வல்லுநர்கள், மகப்பேறு நிபுணர்கள், தொற்று நோயியல் நிபுணர்கள் உள்ளிட்ட பெரிய மருத்துவக் குழுவினரே உடனிருப்பார்கள்.
அந்த வகையில், மார்ச் 27ஆம் தேதி, கரோனா தொற்று உறுதியான பெண்ணிற்கு 1 கிலோ 77 கிராம் எடை கொண்ட குழந்தை பிறந்தது. அதேபோல், கரோனா தொற்று பாதித்த மற்றொரு பெண்ணுக்கு மார்ச் 31ஆம் தேதி மூன்று கிலோ 300 கிராம் எடையுடன் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால், குழந்தைகளுக்கும் கரோனா தொற்று பரவும் என்ற அச்சத்தில், இரண்டு குழந்தைகளையும் தனிமைப்படுத்தி மருத்துவமனை நிர்வாகம் பரிசோதணை மேற்கொண்டது.