தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழப்பு! - mexico shootout 9 people dead

மெக்சிகோ: தெற்கு மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தும் கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கி சூடு

By

Published : Oct 25, 2019, 12:39 PM IST

மெக்சிகோவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் சட்டவிரோத கும்பல்கள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. நேற்று தெற்கு மெக்சிகோ பகுதியான குரேரோ நெடுஞ்சாலையில் லாஸ் ரோஜாஸ் கும்பல் உட்பட பல்வேறு கும்பல்களுக்கு இடையில், போதைப் பொருள் விற்பதில் யார்யார் எந்தெந்த இடங்களை தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவருவது என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது, அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். அதில் அப்பாவி மக்கள் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த மோதலில் அவர்கள் ஏகே-47 ரக துப்பாக்கிகளின் 50 தோட்டாக்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் கடந்த மாதம் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 15 வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

ABOUT THE AUTHOR

...view details