சாவ் பாலோ:பிரேசிலின் சாவ் பாலோவில் ஒருவாரமாக கனமழை பெய்துவந்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சாவ் பாலோ நகரில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து சாவ் பாலோ ஆளுநர் ஜோவா டோரியா தனது ட்விட்டர் பக்கத்தில் "கனமழையால் ஏற்பட்ட சேதங்களை மிகுந்த வருத்தத்துடன் கவனித்துவருகிறேன். நிலச்சரிவில் உயிரிழந்த 18 பேரின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது இரங்கல்.