மெக்சிகோ டெக்ஸாஸின் தென்மேற்கு பகுதியில் ஈகிள் பார்க் வில்லா யூனியன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சனிக்கிழமை (நவ.30)ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் காவலர்கள் நான்கு பேர் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர். முதல் கட்ட தேடுதல் வேட்டையில், சில மாநகராட்சி ஊழியர்களை காணவில்லை என்றும் அப்பகுதி ஆளுநர் தெரிவித்தார்.
மெக்சிக்கோவில் பாதுகாப்பு படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. ஆயுத தாக்குதல் நடத்தி கையில் கிடைத்தவர்களை கடத்தி செல்வதையும் இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.