தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விண்ணிலிருந்து உரையாடிய விண்வெளி வீரர்கள்!

வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட இரண்டு நாசா விண்வெளி வீரர்கள், விண்வெளி நிலையத்திலிருந்து பேசினர்.

NASA astronauts
NASA astronauts

By

Published : Jun 2, 2020, 9:11 PM IST

அமெரிக்கத் தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' தயாரிப்பில் உருவான ஃபால்கன் 9 ராக்கெட், கடந்த 30ஆம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

அமெரிக்க மண்ணிலிருந்து, ஒரு தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட் மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்கள், விண்ணில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

ஃபால்கன் 9 ராக்கெட்டின் முனையில் 'க்ரூ டிராகன்' என்ற விண்கலத்தில் பாப் பெஹ்கென், டவுக் ஹூலே ஆகிய நாசா விண்வெளி வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

19 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, இந்த விண்கலம், கடந்த 31ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.

இதையடுத்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் இந்த விண்வெளி வீரர்கள் நுழைந்து, அங்கு ஏற்கனவே ஆய்விற்காகத் தங்கியுள்ள மற்ற விண்வெளி வீரர்களுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிலையில், விண்வெளி நிலையத்திலிருந்து காணொலி காட்சி மூலம் பேசிய டவுக் ஹூலே, "வாழ்த்துகள் ஸ்பேஸ்எக்ஸ். நீங்கள் இந்தக் கொடியை வென்றுவிட்டீர்கள்" என்றபடி சிறிய அளவிலான அமெரிக்கக் கொடி ஒன்றை ஆட்டினார்.

இந்தக் கொடியானது 2011ஆம் ஆண்டு, அமெரிக்க மண்ணிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்ட விண்வெளி வீரர்களால், சர்வதேச விண்வெளி மையத்தில் விட்டுச் செல்லப்பட்டதாகும். விண்வெளி வீரர்கள் முதலில் விண்ணுக்கு அனுப்பப்போகும் நிறுவனம் எதுவென ஸ்பேஸ்எக்ஸ், பேயிங் நிறுவனத்துக்கு இடையே போட்டாபோட்டி நிலவியது.

இந்தப் போட்டியில் தற்போது ஸ்பேஸ்எக்ஸ் வெற்றிபெற்றதை அடுத்து கொடி அந்நிறுவனத்துக்குப் போய்ச் சேரும்.

விண்வெளி மையத்திலிருந்து பேசும் விண்வெளி வீரர்கள்

இதனிடையே, அவருடன் மிதந்தபடி காட்சியளித்த ஹூலே, "இந்தக் கொடியை நிச்சயம் பூமிக்குக் கொண்டு வருவோம்" எனத் தெரிவித்தார்.

மேலும், தங்கள் விண்வெளிப் பயணம் எவ்வாறு இருந்தது என்பது குறித்த அனுபவத்தையும், க்ரூ டிராகன் குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.

இதையும் படிங்க : கோவிட் 19: உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதி

ABOUT THE AUTHOR

...view details