உலகையே மிரட்டிய பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளே திணறி வருகின்றன். வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அனைவரும் கைகளைக் கழுவ வேண்டும் என்றும், வீட்டைவிட்டு வெளியே வந்தால் கிருமி நாசினி உபயோகிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எளிதில் கரோனா வைரஸ் பரவும் காரணத்தினால், பல மக்கள் வீட்டிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். சமூக இடைவெளி முலம் மக்கள் வைரஸூலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும் எனவும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் சாலைகள் வெறிச்சொடி காணப்படுகிறது. இத்தகவல் வனத்தில் பல காலங்களாக தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் வனவிலங்குகளின் காதுகளுக்கும் சென்றுள்ளது தான் சுவாரஸ்யமான ஒன்று. இதைக் கேள்விப்பட்ட விலங்குகள், ஊருக்குள் விசிட் அடிக்காத பகுதிகளும் இல்லை.
பலரும் ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்கிறார்களா என்பதை வனவிலங்குகள் நேரடியாக ஆய்வு மேற்கொள்வதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகின் சுழற்சியை மாற்றிய கரோனா அந்த வகையில், வேல்ஸில் நாட்டில் உள்ள லாண்டுட்னோ நகரத்தில் சாலைகளில் ஆடுகள் சுதந்திரமாகத் திரிந்து வருகிறது. மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுவதாலும், வெளிச்சம் இல்லாத காரணத்தினாலும் மிகவும் அரிதான கடல் ஆமைகள் முட்டையிடும் நிகழ்வும் கடற்கரையில் நடைபெறுகிறது. இத்தருணம் விலங்குகள் இனப்பெருக்கத்திற்குச் சரியான நேரம் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஸ்டூவர்ட் பிம்ம் (Stuart Pimm) கூறுகையில், "வனவிலங்குகள் சாலையில் வருவது எதிர்பார்க்காத ஒன்றுதான். தற்போது, மிகவும் தெளிவான வானத்தைப் பார்க்கிறோம். நமது முன்னோர்கள் கூறியதுபடியே மலைகளின் அழகிய காட்சிகளை காணமுடிகிறது. வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மாசு குறைந்திருப்பதை காண்கிறோம். இதன் மூலம் தெரிகிறது ஒன்றுதான், அழகான உலகத்தை மனிதர்கள் எப்படி மாற்றியுள்ளார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது " என்றார்.
இதையும் படிங்க:எல்லைகள் வழியே சீனாவுக்குச் செல்லும் கரோனா - தடுக்க களமிறங்கிய அரசு!