தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'இதய அறுவை சிகிச்சைக்கு பின் நலமுடன் இருக்கிறேன்' - அர்னால்டு - அறுவை சிகிச்சை செய்துகொண்ட அர்னால்டு

வாஷிங்டன் : இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் தான் நலமுடன் இருப்பதாக ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

" இதய அறுவைச் சிகிச்சைக்கு பின் நான் நலமுடன் இருக்கிறேன் " ரசிகர்களுக்கு அர்னால்டு செய்தி!
" இதய அறுவைச் சிகிச்சைக்கு பின் நான் நலமுடன் இருக்கிறேன் " ரசிகர்களுக்கு அர்னால்டு செய்தி!

By

Published : Oct 24, 2020, 2:34 PM IST

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் (73) சில நாள்களுக்கு முன்பாக உடல்நலக் குறைவு காரணமாக கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அர்னால்டுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது இதயத்தில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அவரது உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட மருத்துவமனையில் படுக்கையில் இருந்து புகைப்படம் ஒன்றை எடுத்து அர்னால்டு வெளியிட்டு உள்ளார்.

அந்த பதிவில், "கிளீவ்லேண்ட் கிளினிக்கில் எனக்கு மருத்து உதவிகளை வழங்கிய மருத்துவக் குழுவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது நன்றாக இருக்கிறேன். ஏற்கனவே நான் சுற்றித் திரிந்த இந்த கிளீவ்லேண்டின் தெருக்களை மீண்டும் இப்போது கண்டு ரசித்துக்கொண்டிருக்கிறேன். என் மீதான அன்பால், எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி!" என கூறி உள்ளார்.

இதயக் குறைபாடு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டில், ஸ்வார்ஸ்னேக்கர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சிடார்ஸ்-சினாய் மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details