தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அர்மேனியா - அசர்பைஜான் பிரச்னை: நாட்டாமை செய்யவுள்ள அமெரிக்கா!

வாஷிங்டன்: அர்மேனியா, அசர்பைஜான் நாடுகளுக்கிடையை பதற்றம் நிலவிவரும் நிலையில், இரு நாட்டு அமைச்சர்களும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை சந்தித்துப் பேசவுள்ளனர்.

By

Published : Oct 21, 2020, 4:28 PM IST

Updated : Oct 21, 2020, 5:07 PM IST

அமெரிக்கா
அமெரிக்கா

அர்மேனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பகுதிகளான இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதி தொடர்பாக 1994ஆம் ஆண்டு முதல் கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது.

சர்ச்சைக்குரிய பிராந்தியமான நகோர்னோ-காாராபக் பகுதியில் இரு நாடுகளும் தற்போது போரிட்டுவருகின்றன. மலைப்பகுதியான இங்கு அசர்பைஜான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 31க்கும் மேற்பட்ட அர்மேனியப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வாஷிங்டனுக்கு செல்லவுள்ள இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை சந்தித்துப் பேசவுள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவுக்கான அசர்பைஜான் நாட்டு தூதர் எலின் சுலேய்மானோவ் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்கா அழைப்பு விடுத்த நிலையில், அந்நாட்டிற்கு செல்லவுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஹுன் பேராமோவ், பாம்பியோவை சந்தித்து பேசவுள்ளார்.

நகோர்னோ - காாராபக் பிராந்தியத்தில் நிலவும் பிரச்னை குறித்து இக்கூட்டத்தில் பேசவுள்ளோம். போர் நிறுத்தம் என்பது இங்கு பிரச்னையாக இல்லை. சர்வதேச விதிப்படி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருப்பதே சிக்கலாக உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவுக்கான அர்மேனியா நாட்டு தூதர் கிரிகர் ஹோவன்னிசியன் செய்தியாளர்களை சந்தித்தபோது, "அசர்பைஜானக்கு வழங்கப்படும் ராணுவ உதவியினை நிறுத்த வலியுறுத்தப்படும். துருக்கி எதிராக பொருளாதார விதிக்க கோரிக்கை விடுக்கப்படும்" என தெரிவித்தார்.

அர்மேனியா, அசர்பைஜான் நாடுகள் சோவியத் யூனியனின் அங்கங்களாக இருந்தன. இதையடுத்து, சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் கிறித்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள அர்மேனியா ஒரு நாடாகவும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள அசர்பைஜான் மற்றொரு நாடாகவும் உருவெடுத்தது. தனித்தனி நாடுகளாக பிரிந்த நிலையில், நகோர்னா-காராபாக் பிராந்தியத்தை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடின. இதனைத் தொடர்ந்து, நகோர்னா-காராபாக் தன்னாட்சிப் பிராந்தியமாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், எல்லை பகுதி தொடர்பாக 1994ஆம் ஆண்டு முதல் இருநாடுகளுக்கிடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது. இப்பிரச்னையில், ரஷ்யா தலையிட்டு முன்னதாக சமசரப் பேச்சுவார்த்தை நடத்தியது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லாவ்ரோ இரு நாட்டு பிரதிநிதிகளிடமும் பேசி போர் நிறுத்த ஒப்பந்ததை கடந்த 10ஆம் தேதி மேற்கொண்டார். இருப்பினும் மோதல் தொடர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: கராச்சியில் பயங்கர குண்டுவெடிப்பு... 3 பேர் உயிரிழப்பு!

Last Updated : Oct 21, 2020, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details