தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனாவை கட்டுப்படுத்தும் மலேரியா மருந்து: டொனால்ட் ட்ரம்ப் - கரோனா பாதிப்புக்கு மலேரியா எதிர்ப்பு மருந்து

நியூயார்க்: கரோனா பாதிப்புக்கு மலேரியா எதிர்ப்பு மருந்தை பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

Donald Trump  Hydroxychloroquine  coronavirus  Trump on COVID-19  கரோனாவை கட்டுப்படுத்தும் மலேரியா எதிர்ப்பு மருந்து: டொனால்ட் ட்ரம்ப் தகவல்  கரோனா பாதிப்புக்கு மலேரியா எதிர்ப்பு மருந்து  மலேரியா எதிர்ப்பு மருந்து
Donald Trump Hydroxychloroquine coronavirus Trump on COVID-19 கரோனாவை கட்டுப்படுத்தும் மலேரியா எதிர்ப்பு மருந்து: டொனால்ட் ட்ரம்ப் தகவல் கரோனா பாதிப்புக்கு மலேரியா எதிர்ப்பு மருந்து மலேரியா எதிர்ப்பு மருந்து

By

Published : Mar 20, 2020, 11:25 PM IST

ஜப்பான் நாட்டு தயாரிப்பான பேவிபிரைவர் (favipiravir) என்ற காய்ச்சலுக்கான மருந்து கரோனா சிகிச்சைக்கு நல்ல தீர்வாகும் என்று சீனா அறிவித்துள்ளது.

கரோனா பாதிப்பை இந்த மருந்து குணப்படுத்துகிறது என்றும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து ஜப்பானில் போதிய அளவில் கையிறுப்பு உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், “கரோனா பாதிப்புக்கு மலேரியா எதிர்ப்பு மருந்து பரவாயில்லை.

இது ஆரம்பக் கட்ட தாக்குதலை குணப்படுத்துகிறது. இதனை பயன்படுத்தலாம்” என கூறியுள்ளார்.

உலகில் கரோனா பாதிப்புக்கு இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details