லாஸ் ஏஞ்சல்ஸ்:ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் ஆப்கன் மக்கள் உள்பட பல்வேறு நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்துவருகின்றனர். இதனிடையே தாலிபான்களின் வன்முறை செயல்களுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.
இந்த நிலையில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இதையடுத்து அவர் முதல் பதிவிலேயே, தாலிபான் குறித்து ஆப்கன் சிறுமி ஒருவர் தனக்கு எழுதிய கடிதத்தை பகிர்ந்துள்ளார். அந்தக் கடிதத்தில், 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எங்கள் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தை இழந்தோம். அனைவரின் வாழ்க்கையும் இருண்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.