தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

Rapid Covid-19 Tests: அமெரிக்காவில் இனி ஆர்டர் செய்ய முடியும் - அமெரிக்காவில் இலவச ராபிட் டெஸ்ட்

அமெரிக்காவில் வருகிற 19ஆம் தேதி முதல், புதிய இணையதளத்தின் மூலம், இலவச ராபிட் கரோனா சோதனை கருவிகள் ஆர்டர் செய்துகொள்ளலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Americans Can Order Free Rapid Covid-19 Tests  Rapid Covid-19 Tests  Americans Can Order free Rapid Covid-19 Tests  free Rapid Covid-19 Tests kid  இலவச ராபிட் கரோனா சோதனை கருவி  ராபிட் கரோனா சோதனை கருவி  அமெரிக்காவில் இலவச ராபிட் டெஸ்ட்  கரோனா பரிசோதனைகள்
Rapid Covid-19 Tests

By

Published : Jan 15, 2022, 8:14 AM IST

வாஷிங்டன்:ஜனவரி 19 முதல் covidtest.gov என்ற இணையதளம் மூலம் நான்கு இலவச கோவிட்-19 சோதனைகளை அமெரிக்க குடும்பங்கள் ஆர்டர் செய்யலாம், ஆர்டர் செய்த ஏழு முதல் 12 நாட்களுக்குள் டெலிவர் செய்யப்படும் என்று வெள்ளை மாளிகை ஜனவரி 14 தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் மாறுபாட்டின் விரைவான பரவலின் போது அதிகரித்த தேவைக்கு மத்தியில், நாடு முழுவதும் கரோனா பரிசோதனைகளின் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் தொட்டங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்க அரசாங்கம் ஏற்கனவே 50 கோடிக்கும் அதிகமான சோதனைகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்கர்களுக்கு நூறு கோடி இலவச சோதனைகளை வாங்குவதாக உறுதியளித்துள்ளார். சோதனைகளை ஆர்டர் செய்ய இணைய அணுகல் இல்லாத நபர்களுக்காக ஒரு தொலைபேசி இணைப்பைத் தொடங்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஆர்டர் செய்தவுடன், சோதனைகள் அமெரிக்க தபால் சேவை மூலம் அமெரிக்க குடும்பங்களுக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு குடும்பமும் நான்கு முகமூடிகளுக்கு மட்டுமே.

இதையும் படிங்க: ஹேக்கிங் தாக்குதல்: உக்ரைன் அரசின் இணையதளங்கள் முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details