தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க கடற்படை செயலர் பதவி நீக்கம் - அமெரிக்க கடற்படை செயலாளர் ரிச்சர்ட் ஸ்பென்சர்

வாஷிங்டன் : அமெரிக்க கடற்படை செயலர் ரிச்சர்ட் ஸ்பென்சரை அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்துள்ளார்.

American Navy Secretary Richard Spencer

By

Published : Nov 25, 2019, 11:36 AM IST

அமெரிக்க கடற்படையில் ( NAVY SEAL) பணிபுரிந்து வரும் அலுவலர் எட்வர்ட் கேலர். இவர், 2017ஆம் ஆண்டு ஈராக்கில் பணியமர்த்தப்பட்டார். அப்போது, ஒரு பிணத்தின் அருகே நின்றுகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எட்வர்ட் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டு வரும் டிசம்பர் 2ஆம் தேதி விசாரணை நடைபெறவிருந்தது.

இந்நிலையில், எர்வர்ட் விஷயத்தைக் கடற்படை செயலர் ரிச்சர்ட் ஸ்பென்சர் சரியாகக் கையாளவில்லை எனக் கூறி அவரை பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலரின் வலியுறுத்தலின் பேரில் ரிச்சர்ட் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாக பென்டகன் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) செய்தித் தொடர்பாளர் ஹாஃப்மென் தெரிவித்துள்ளார்.

அதுபோன்று, இந்த மாத இறுதியில் எட்வர்ட் ராஜினாமா செய்துகொள்ளலாம் என்றும், டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறவிருந்த ஒழுங்கு நடவடிக்கை விசாரணை ரத்து செய்யப்படுவதாகவும் மார்க் எஸ்பர் உத்தரவிட்டுள்ளார்.

செல்வாக்குமிக்க சக்தியாக உருவெடுக்குமா பிரிக்ஸ் ?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details