அமெரிக்காவில் உதாஹ் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில், கார் ஒன்று மின்விளக்கு எரிந்துகொண்டிருந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. அப்போது அந்த வழியே காரில் வந்த காவலர், தண்டவாளத்தில் ரயில் வருவதைப் பார்த்து சந்தேகமடைந்து காரிலிருந்து இறங்கி ஓடிச்சென்று பார்த்துள்ளார். காருக்குள் ஓட்டுநர் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அசுர வேகத்தில் ரயில்... தண்டவாளத்தில் காருக்குள் சிக்கிய நபர் - பதறவைக்கும் காட்சி! - train hit car footange get viral
வாஷிங்டன்: ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் மயங்கிக் கிடந்த நபரை காவலர் காப்பாற்றிய காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
பதறவைக்கும் சிசிடிவி காட்சி
ரயில் அசுர வேகத்தில் காரை நோக்கி வருவதைப் பார்த்த காவலர் உடனடியாக ஓட்டுநரை வெளியே இழுத்துக் காப்பாற்றியுள்ளார். ஓட்டுநரைக் காவலர் வெளியே எடுக்கும் அடுத்த நொடியே அசுர வேகத்தில் வந்த ரயில் காரில் மோதி தூக்கிவீசும் காட்சி காவலரின் காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காணொலியை ட்விட்டரில் காவல் துறையினரால் பகிரப்பட்டுள்ளது. உயிரை பணயம் வைத்து ரயில் மோதுவதற்கு ஒரு நொடி முன்பு காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.