உலகத்தையே ஸ்தம்பிக்கச் செய்துள்ள கோவிட்-19 பெருந்தொற்று அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவருகிறது.
இதனைக் கட்டுக்குள் கொண்டுவர மற்ற நாடுகளைப் போல அங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முடங்கிப் போன பல அமெரிக்க நிறுவனங்கள், கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இதன் எதிரொலியாக, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.
ஆனால், அந்நாட்டின் பெரும் பணக்காரர்களுக்கு நிலை தலைகீழாக உள்ளது. பெருந்தொற்று காலத்திலும் அவர்கள் காட்டில் பண மழை கொட்டோ கொட்டெனக் கொட்டிவருகிறது.
அமெரிக்காவின் ஐந்து பெரும் பணக்காரர்களான, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், பிரபல முதலீட்டாளர் வாரன் பஃப்பட், ஒராகில் நிறுவனர் லாரி லீசன் ஆகியோரின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தலா 75.5 பில்லியன் டாலர் அல்லது 19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக ATF, IPS ஆய்வு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.