இதுகுறித்து டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில், "மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு ஜூன் 10ஆம் தேதி முதல் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக ஐந்து சதவீதம் வரி விதிக்கப்படும். மெக்சிகோ வழியாக (அமெரிக்காவுக்குள்) அத்துமீறி குடிபெயர்பவர்களை அந்நாடு தடுக்கும் வரை இந்த வரிவிதிப்பு தொடரும். சட்டவிரோத குடிபெயர்வு தடுக்கப்படவில்லை என்றால் வரி மேலும் அதிகரிக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
'மெக்சிகோ பொருட்களுக்கு கூடுதல் வரி' - ட்ரம்ப் எச்சரிக்கை! - donald trump
வாஷிங்டன்: "மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் கூடுதலாக ஐந்து சதவீதம் வரிவிதிக்கப்படும்" என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிபர் ட்ரம்ப்பின் வலியுறுத்தல்களை மெக்சிகோ நிறைவேற்றவில்லை எனில் ஜூலையில் 10, ஆகஸ்டில் 15, செப்டம்பரில் 20, அக்டோபரில் 25 என வரி உயர்த்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை, மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முற்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை எல்லை பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியின்போது கைது செய்தனர். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் எழுப்ப கடந்த பிப்ரவரி மாதம், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவசரநிலையைப் பிரகடனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.