டெக்சாஸ் மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது ஹூஸ்டன் நகர். இந்நகரில் கடந்த மூன்று நாட்களாக இமெல்டா புயல் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இடைவிடாது பெய்துவரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்நகரில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் இருப்பவர்களை மீட்கும் மீட்புப்படை அதனைத் தொடர்ந்து சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களின் மூலம் மீட்புக் குழுவினர் நூற்றுக்கணக்கான மக்களை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். தொடர்மழை பெய்துவருவதால் ஹூஸ்டன் நகரில் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ரைஸ்லான் மருத்துவமனையைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்ததையடுத்து அங்கிருக்கும் நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
வெள்ளத்தில் தத்தளிக்கும் நபர் இந்நிலையில், ஹூஸ்டன் நகரில் தென்கிழக்குப் பகுதியில் வசித்துவந்த ஒருவர், தனது குதிரையை மழை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச்செல்ல முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தையடுத்து அந்நகரில் சுமார் ஒரு லட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிசக்தி ஆலை மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் நடைபெறும் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 59 பேர் உயிரிழந்தனர். இதனால் மீட்புப் படைக் குழுவினர் அந்நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்திவருகின்றனர்.