தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'200 ஊழியர்களுக்கு ரூ.70 கோடி போனஸ்' - கிறிஸ்துமஸ் பரிசுமழைப் பொழிந்த நிறுவனம்! - christmas bonus for employees at america

வாஷிங்டன்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது நிறுவனத்தில் பணிபுரியும் 200 ஊழியர்களுக்கு ரூ. 70 கோடி போனஸ் என்று பிரபல அமெரிக்க நிறுவனம் அறிவித்துள்ளது.

bonus
கிறிஸ்துமஸ் பரிசுமழை

By

Published : Dec 13, 2019, 10:49 PM IST

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் செயின்ட் ஜான் என்னும் தனியார் மனை வணிக (ரியல் எஸ்டேட்) நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விருந்துக்கு வருகைதந்த ஊழியர்கள் அனைவருக்கும் சிவப்பு நிற உறைகள் வழங்கப்பட்டன. பிறகு விருந்து நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் தலைவர் எட்வர்ட் செயின்ட் ஜான், தனது ஊழியர்களைக் கையில் வைத்திருக்கும் உறையை திறந்து பார்க்கச் சொன்னார்.

உறைகளைத் திறந்துபார்த்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் துள்ளிக்குதித்தனர். அவர்கள் வைத்திருந்த உறையில் கிறிஸ்துமஸ் போனஸ் வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஊழியர்களுக்கு அவர்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் போனஸ் வழங்கப்பட்டது. அதில், ஒரு நபருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை போனஸ் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாலையில் கொத்துக்கொத்தாக செத்துக்கிடந்த பறவைகள்! - ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details