தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீனா-அமெரிக்கா மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை - வர்த்தக பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: சீனா அமெரிக்கா இடையே நீடித்துவரும் வர்த்தக பனிப்போரை முடிவுக்கு கொண்டுவர மீண்டும் இருநாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

மீண்டும் சீன-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை

By

Published : Mar 20, 2019, 12:24 PM IST

சீனா அமெரிக்கா இடையே கடுமையான வர்த்தகப்போர் நடைபெற்றுவருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே இரண்டு நாடுகளும் மாறிமாறி இறக்குமதி வரியை உயர்த்திவருகின்றனர்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஜீ-20 மாநாடு இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைக்கு வழி வகுத்தபோதும் சுமுகமான தீர்வு ஏற்படவில்லை.

ஏற்கனவே சீன அரசு அலுவலர்கள் வாஷிங்டனில் அமெரிக்க அரசு அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக மார்ச் மாத இறுதிவரை வரி உயர்வை ட்ரம்ப் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் அமெரிக்க அலுவலர்கள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தி பெய்ஜிங் செல்லவுள்ளதாக அமரிக்க கருவூல செயலர் ராபர்ட் லிட்டைசர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details