உலகின் மிகப் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான், அமெரிக்காவில் மருத்து டெலிவரி சேவையில் இன்று (நவ.17) நுழைந்துள்ளது. இதன்படி அமெரிக்கர்கள் அமேசான் தளத்தில் மருந்துகளை ஆர்டர் செய்யலாம்.
அவ்வாறு ஆர்டர் செய்யப்படும் மருந்துகள் ஒரு சில நாள்களில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படும். இருப்பினும், தவறாக உபயோகிக்கப்படக்கூடிய மருந்துகள், தளத்தில் விற்பனை செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் அமேசான் தளத்தில் மட்டுமின்றி, அருகில் இருக்கும் மருந்தகங்களுக்குச் சென்று மருந்துகளை வாங்கினாலும் சலுகை உண்டு என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல மருந்துக் கடை உரிமையாளர்களும் அமேசான் தளத்தில் தங்களைப் பதிவு செய்துகொண்டு வியாபாரத்தைத் தொடங்கலாம்.