அமேசான் காட்டுத்தீ பல வாரங்களுக்கு மேலாக காட்டை அழித்து வருகின்றது. கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டர் நிலம் தீயினால் நாசமாகியுள்ளது. பல்வேறு மரங்கள், தாவரங்கள், தீயில் அழிந்த நிலையில் விலங்குகளும் பறவைகளும் அதில் உயிரிழந்துள்ளன.
காட்டுத் தீயை அணைப்பதற்காக அதிபர் ஜெய்ர் போல்சனரோ பிறப்பித்த உத்தரவின் பேரில் ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இவர்கள் நடத்திய விசாரணையில் 63 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு 87 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.