அமெரிக்காவின் செனட் சபையின் நான்கு உறுப்பினர்கள், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.
அந்தக் கடித்தில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தன்னாட்சி உரிமைகள் தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டு ஆறு மாதத்துக்கு மேலாகியும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அப்பிராந்தியத்தில் இணையச் சேவைகளை இன்னும் முடக்கத்திலேயே வைத்திருக்கிறது.
முக்கிய அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் வாழும் சிறுபான்மையின சமூகத்தினருக்கும் அந்நாட்டின் மதச்சார்பின்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நரேந்திர மோடி அரசு சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டுவருகிறது.