தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'அமரேந்திர பாகுபலி... இல்ல இல்ல நம்ம ட்ரம்ப்(ப்ப்ப்)... ' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகுபலி வீடியோ

வாஷிங்டன்: 'பாகுபலி' படத்தில் கதாநாயகனின் முகத்துக்குப் பதிலாக, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முகத்தை மார்ஃபிங் செய்து நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்த காணொலி ஒன்றை, அவரே ரீ ட்வீட் செய்துள்ளார்.

trump, ட்ரம்ப்
trump

By

Published : Feb 23, 2020, 8:42 AM IST

'பாகுபலி' படத்தில் சில காட்சிகளை வெட்டி, முக்கியக் கதாபாத்திரங்களின் முகத்துக்குப் பதிலாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் முகங்களை மார்ஃபிங் செய்து, "ட்ரம்ப்பின் இந்திய வருகையை பறைசாற்றும் விதமாக, இந்த காணொலியை உருவாக்கியுள்ளேன்" என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இந்த காணொலியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ரீ ட்வீட் செய்து, "இந்திய நண்பர்களைச் சந்திக்க காத்திருக்கிறேன்" என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவு தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளை இந்தியா வருகிறார்.

இதையும் படிங்க : தன்பாலின ஈர்ப்பு பற்றிய பாலிவுட் படம்: ஒற்றை வார்த்தையில் ட்ரம்ப் கருத்து

ABOUT THE AUTHOR

...view details