ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி 95 விழுக்காடு வெற்றிபெற்றதாகக் கூறி, அதனை கரோனாவுக்கான மருந்தாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இதனையடுத்து, அவசரகாலப் பயன்பாட்டிற்காக இந்த மருந்தினைப் பயன்படுத்த அனுமதி வழங்கியது.
இந்தத் தடுப்பு மருந்து நேற்று (டிசம்பர் 8) பிரிட்டன் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. முதற்கட்டமாக, முதியவர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்குச் செலுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அரசிற்குப் பிறகு இரண்டாவதாக கனடா அரசும் ஃபைசர்-பயோ என்டெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதாரத் துறை, தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் குறித்த தரவுகளைப் பற்றி முழுமையான விவரங்கள் வந்த பிறகே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.