தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நீண்ட கால வளர்ச்சிக்கு விரிவான கொள்கை திட்டத்தை வகுக்க வேண்டும் - உலக வங்கி - விரிவான கொள்கை திட்டம்

கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர்ந்து, நீண்ட கால வளர்ச்சியை உறுதி செய்ய உலக நாடுகள் விரிவான கொள்கை திட்டத்தை வகுக்க வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

வறுமை
வறுமை

By

Published : Jun 19, 2020, 5:43 PM IST

கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கத்தால் உலக நாடுகள் நிதி நெருக்கடியைச் சந்தித்துவருகின்றன. இதிலிருந்து மீண்டெழுந்து நீண்ட கால வளர்ச்சியை உறுதி செய்ய விரிவான கொள்கை திட்டத்தை வகுக்க வேண்டும், தவறினால் ஆறு கோடி மக்கள் இந்தாண்டு வறுமையில் சிக்கி தவிப்பர் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கி தலைவர் டெவிட் மல்பாஸ் கூறுகையில், "கரோனா வைரஸ் நோய் வேகமாக பரவியதாலும் பொருளாதார மந்த நிலையாலும் உலகம் முழுவதும் உள்ள ஏழை மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு இறுதிக்குள் ஆறு கோடி மக்கள் வறுமையில் சிக்கி தவிப்பர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் மீண்டெழும்போது வறுமையில் சிக்கி தவிப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மோசமான சுகாதார பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதனை மீட்டெடுக்க வளரும் நாடுகளும் சர்வதேச சமூகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட கால வளர்ச்சியை உறுதி செய்ய உலக நாடுகள் விரிவான கொள்கை திட்டத்தை வகுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தொடர்ச்சியாக டிவி பார்த்த மகன்... தாய் திட்டியதால் விபரீத முடிவு!

ABOUT THE AUTHOR

...view details