உலகளவில் கரோனா வைரஸ் நோய்ப் பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்து 85 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் இந்நோயால் உயிரிழந்துள்ள நிலையில், அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
கடந்த ஜனவரி மாதம் சீனாவில் தீவிரமாகப் பரவத் தொடங்கிய இந்நோய், பின்னர் ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு நாடுகளில் தீவிரமாகப் பரவியது. கடந்த 10 நாள்களாக அமெரிக்கா தொடங்கி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் கோவிட்-19 (கரோனா) வைரஸ் தொற்றுடன் தீவிரப் போர் நடத்திவருகின்றன.
தென் அமெரிக்க நாடுகளில் இதன் தாக்கம் பெரிதும் காணப்படாத நிலையில் தற்போது அங்கும் கரோனா தலைதூக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பிரேசில், சீலே, பெரு ஆகிய நாடுகளில் இந்நோய் தற்போது வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.
அதிக பட்சமாக பிரேசில் நாட்டில் இதுவரை 234 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பொதுச்சுகாதாரம் மோசமாக உள்ளதால் அங்குள்ள சிறைவாசிகள் நோய் பரவும் செய்தி தெரிந்தவுடன் அதிரடி முடிவுகளைத் தற்போது மேற்கொண்டுள்ளனர். தங்களுக்கு சிறையில் பாதுகாப்பான, சுகாதாரத்திற்கான சூழல் இருக்காது என்பதால் உள்ளூர் சிறைவாசிகள் சுமார் 1,500 பேர் சிறையிலிருந்து தப்பித்துள்ளனர். சிறைவாசிகளின் இந்தச் செயல் பிரேசில் அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:'லாக் டவுன்'இல் ஸ்பெயின்: பிரதமரின் மனைவிக்கு கொரோனா உறுதி