தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

5 நிமிடங்களில் கரோனா சோதனை - அசத்தும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்! - US Corona

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த அபோட் என்ற ஆராய்ச்சி நிறுவனம், ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பதை வெறும் ஐந்து நிமிடங்களில் கண்டறிய உதவும் கருவியை உருவாக்கியுள்ளது.

Abbott
Abbott

By

Published : Mar 28, 2020, 5:07 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்று சீனாவில் தற்போது படிப்படியாகக் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இருப்பினும் அமெரிக்கா, இத்தாலி, இந்தியா போன்ற நாடுகளில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது.

வேறெங்கும் இல்லாத அளவுக்கு இந்த வைரஸ் அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவருகிறது. நேற்று (மார்ச் 27) ஒரே நாளில் மட்டும் சுமார் 18,691 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய, போதுமான கண்டறியும் நிலையங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் அதிகரித்துவருகின்றது.

இந்நிலையில், ஒருவருக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய சிறிய டோஸ்டர் அளவுகொண்ட ஒரு கருவியை அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான அபோட் உருவாக்கியுள்ளது. இந்தக் கருவியின் மூலம், ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருந்தால் ஐந்து நிமிடங்களிலும் இல்லையென்றால் வெறும் 13 நிமிடங்களிலும் தெரிந்துவிடும்.

இதன் மூலம் வைரஸ் கண்டறியும் நிலையங்களைத் தாண்டி பல்வேறு இடங்களிலும் வைரஸ் தொடர்பான சோதனையை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும், தொற்று இருப்பதை எளிதில் கண்டறிவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் தனிமைப்படுத்த முடியும். இதன் காரணமாக வைரஸ் பரவலையும் எளிதில் கண்டுப்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கருவிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் ஒரு மாதத்தில் 50 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பது குறித்த சோதனையை எளிதில் மேற்கொள்ள முடியும்.

இதையும் படிங்க: 2.2 லட்சம் கோடி டாலர் - நிதி ஒதுக்கீட்டுக்கு டிரம்ப் ஒப்புதல்!

ABOUT THE AUTHOR

...view details