தமிழ்நாடு

tamil nadu

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு அழையா விருந்தாளியாக வரும் சிறிய கோள் - நாசா எச்சரிக்கை!

By

Published : Aug 24, 2020, 4:21 PM IST

டெல்லி : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு நாள் முன், சிறிய கோள் ஒன்று பூமியைத் தாக்க 0.41 விழுக்காடு வாய்ப்புள்ளதாக நாசா ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ast
ast

அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன் அதாவது நவம்பர் 2ஆம் தேதி, சிறிய கோள் ஒன்று பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாசா வெளியிட்ட அறிக்கையில், "நவம்பர் 2ஆம் தேதியன்று 0.002 கிமீ (சுமார் 6.5 அடி) பரப்பளவு கொண்ட ’2018 விபி 1’ என்ற சிறுகோள் பூமிக்கு அருகில் வரவுள்ளது. இது பூமியைத் தாக்க வெறும் 0.41 விழுக்காடு வாய்ப்பு மட்டுமே உள்ளது‌. இது முதன்முதலில் 2018இல் கலிபோர்னியாவில் உள்ள பாலோமர் ஆய்வகத்தில் தான் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், இந்த சிறிய அளவிலான விண்கற்களால் பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படாது என்றே ஆய்வு முடிவுகள் தெரிக்கின்றன.

மேலும், கடந்த வாரத்தில் கார் அளவிலான சிறிய கோள் ஒன்று பூமியைக் கடந்து சென்றது. இது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.08 மணிக்கு தெற்கு இந்தியப் பெருங்கடலில் இருந்து 2,950 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து சென்றுள்ளது. பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்கள் பெரும்பாலானவை, மிக அதிக தூரத்தில் பாதுக்காப்பாகத்தான் செல்கின்றன. நிலவை விட வெகு தொலைவில் அவை கடந்து செல்வதால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details