மாபெரும் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று இரண்டாம் முறை பிரதமராக பதவியேற்றப்பின் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். தேர்தல் வெற்றிக்குப் பின் மோடி மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கையான அமெரிக்கா பயணம் குறித்த அட்டவணை இதோ
செப்டம்பர் 21:
- ஹூஸ்டன் நகருக்கு செல்லும் மோடி அங்கு வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்கிறார். எரிசக்தி துறையைச் சார்ந்த முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
செப்டம்பர் 22:
- இந்திய வம்சாவளியினருடன் பங்கேற்கும் ஹவுடி மோடி என்ற சிறப்பு நிகழ்ச்சி. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.
- அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடன் சிறப்பு கலந்துரையாடல்
செப்டம்பர் 23:
- ஐ.நா. பொதுச்செயலாளர் நடத்தும் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம்
- சுகாதாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் நடத்தும் கருத்தரங்கம்
- தீவிரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வெளிநாட்டுத் தலைவர்களுடன் கூட்டுப் பேச்சுவார்த்தை