தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மாற்றான் மனைவி மீது மோகம் கொண்ட இளைஞருக்கு ரூ.5 கோடி அபராதம் - கலிபோர்னியா குடும்ப நீதிமன்றம்

வாஷிங்டன்: பிறர் மனைவி மீது மோகம் கொண்டு குடும்பத்தின் நிம்மதியை கெடுத்த இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஐந்து கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

adultery

By

Published : Oct 4, 2019, 2:49 PM IST

Updated : Oct 5, 2019, 4:05 PM IST

அமெரிக்காவின் வட கலிஃபோர்னியா பகுதியில் கெவின் ஹார்வேர்டு என்பவர் வசித்துவருகிறார். இவர் கலிபோர்னியா குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

அந்த மனுவில், தனது முன்னாள் மனைவியின் செய்கையால் மனநிம்மதியின்றி தவிப்பதாகத் தெரிவித்திருந்தார். ஹார்வேர்டு தனது மனைவியுடன் 12 ஆண்டுகள் இல்லற வாழ்க்கை நடத்தியுள்ளார்.

கணவன்-மனைவியிடையே பிரச்னை

குடும்பச் சூழ்நிலை காரணமாக மனைவியும் கணவனும் வேலைக்குச் சென்றுள்ளனர். ஒருகட்டத்தில் எதற்கெடுத்தாலும் ஹார்வேர்டு மீது அவரின் மனைவி கோபித்துக் கொண்டார். இதை பெரிதுபடுத்தாத ஹார்வேர்டு தனது அலுவலகப் பணியில் கவனம் செலுத்தினார்.

இந்த நிலையில் ஒருநாள் கணவன்-மனைவி இருவரும் தனியாக பேசிக் கொண்டனர். அப்போது, ஹார்வேர்டுவின் மனைவி விவாகரத்து கேட்டார். இதைக்கேட்டு அதிர்ந்த ஹார்வேர்டு, குடும்ப நல மருத்துவரிடம் செல்லலாம் என அறிவுறுத்தினார்.

இருவரும் மருத்துவரை சந்தித்து கவுன்சிலிங் எடுத்தனர். எனினும் அவரின் மனைவி விவாகரத்து முடிவில் உறுதியாக இருந்தார். இதையடுத்து ஹார்வேர்டும் விவாகரத்து வழங்க சம்மதம் தெரிவித்துவிட்டார்.

இருவரும் பரஸ்பரம் அடிப்படையில் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் மனைவியின் செயல்பாடுகள் குறித்து ஒருவர் வாயிலாக ஹார்வேர்டு அறிந்து கொண்டார்.

மண உறவைத் தாண்டிய காதல்

ஹார்வேர்டுவின் மனைவிக்கு அவருடன் பணியாற்றும் சக இளைஞர் ஒருவருடன் மண உறவைத் தாண்டிய காதல் இருந்துள்ளது. இருவரும் அவ்வப்போதும் இன்பம் கழித்து வந்துள்ளனர்.

இதைக்கேட்ட ஹார்வேர்டு ஒரு கணம் அதிர்ந்துபோனார். மேலும் தனது மன உளைச்சலுக்கு காரணமான இளைஞரை சட்டரீதியாக சந்தித்தார்.

இளைஞருக்கு ரூ.5 கோடி அபராதம்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹார்வேர்டு குடும்பத்தில் புயல் வீச காரணமாக இருந்த அந்த இளைஞருக்கு ஏழு லட்சத்து 50 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 5 கோடியே 31 லட்சத்து 80 ஆயிரத்து 601 ரூபாய்) அபராதம் விதித்தது. மேலும் அந்தப் பணத்தை இழப்பீடாக ஹார்வேர்டுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியது.

இது குறித்து பேசிய ஹார்வேர்டுவின் சட்ட ஆலோசகர், "திருமண பந்தத்தை தாண்டிய உறவுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. இதுபோன்ற 30-க்கும் மேற்பட்ட வழக்குகளை நடத்தியுள்ளேன். 2010ஆம் ஆண்டு நீதிமன்றம் இதேபோன்று பாதிக்கப்பட்ட நபருக்கு 59 லட்சம் டாலர் இழப்பீடு வழங்கியது" என்றார்.

Last Updated : Oct 5, 2019, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details