அண்டார்டிக் பகுதியில் ஆண்டுதோறும் பனி மாரத்தான் ஓட்டம் நடைபெறுவது வழக்கம். கடும் குளிர் நிறைந்துள்ள அண்டார்டிகா பகுதியில் நடைபெறுவதால், வழக்கமான மராத்தன் போட்டிகளைவிட பல மடங்கு கடினமானதாக இந்த மாரத்தான் ஓட்டம் இருக்கும்.
இந்தாண்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில், 84 வயதான கனடா நாட்டைச் சேர்ந்த முதியவர் வெற்றிகரமாக நிறைவுசெய்தார். இதன்மூலம், இந்த மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மிகவும் வயதான நபர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.