அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா தீபகற்பத்தில், இன்று மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.2ஆக இது பதிவாகியுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம், உயிரிழப்பு குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு, அலாஸ்காவுக்கு மட்டும்தானா அல்லது பசிபிக் பிராந்தியம் முழுவதுமா என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூர்ந்து கவனித்துவருகிறது.
இதையடுத்து கனடா, ஜப்பான், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் உஷார் நிலையில் உள்ளன.
இதையும் படிங்க:மாலிஸ்தான் மாவட்டத்தில் 43 அப்பாவி மக்களை கொலை செய்த தலிபான்கள்!