இந்தியா உள்ளிட்ட உலகின் 193 நாடுகள் உறுப்பினர்களாகக் கொண்ட ஐநா சபையின் பொதுக்கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவதாவது வழக்கம். இதில், உலக நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் காணப்படுகின்றன.
தொடங்கியது ஐநா பொதுக் கூட்டம் - 74-வது ஐநா பொதுக் கூட்டம்
நியூயார்க்: 74ஆவது ஐநா சபை பொதுக் கூட்டம் நியூயார்க்கில் உள்ள ஐநா சபை தலைமையகத்தில் நேற்று தொடங்கியது.
UN general assembly
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான (74ஆவது) ஐநா சபை பொதுக்கூட்டம் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபை தலைமையகத்தில் நேற்று தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் 143 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில், பருவநிலை மாற்ற மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.