கர்நாடக மாநிலம் கூர்க் வனப்பகுதியில் பிறந்த அம்பிகா யானை, அதன் 13 வயதில் அமெரிக்காவுக்கு இந்திய குழந்தைகள் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. அரை நூற்றண்டுக்கும் மேலாக இந்த யானை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஸ்மித்சோனியன் வன உயிரினப் பூங்காவில் இருந்தது. இதுவரையிலும், லட்சணக்கணக்கான பார்வையாளர்களை மகிழ்வித்தது. ஆனால், சமீப காலமாக, 74 வயதான அம்பிகா யானை நிற்க முடியாமல் கடுமையான உடல்நலக் குறைவால் அவதிப்பட்டது.
வயது முதுமை காரணமாக அம்பிகா யானையின் வலது கால் எலும்புகள் வலுவிழந்தன. காலில் புண் உருவாகி, நடக்க முடியாமல் வலியால் துடித்துள்ளது. இந்த வேதனையான நாட்களை அனுபவித்த அம்பிகா யானையை, ஸ்மித்சோனியன் தேசியப் பூங்காவில் கால்நடை மருத்துவர்கள் குழு கருணைக் கொலை செய்தனர்.