தென் அமெரிக்கா நாடுகளுள் ஒன்றான பெருவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.41 மணிக்கு பெருவின் வடக்கு பகுதியில் சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம், சுமார் 105 கிலோமிட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி! - 1-dead
லிமா: பெரு நாட்டில் ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
பெரு நிலநடுக்கம்
இதுவரை இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், 130 கட்டடங்கள் பெருத்த சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு மீட்புத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு அதிபர் மார்ட்டின் விஸ்காரா நேரில் பார்வையிட்டு, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஈக்குவடோர், கொலம்பியா, பிரேசில், பொலிவியா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.