அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள புரூக்ளின் போரோ (Brooklyn Borough) பகுதியில் நேற்று (ஜூலை 13) மாலை 6.19 மணியளவில் 23 வயதான இளம்பெண் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. தகவலறிந்து விரைந்த காவல் துறையினர், அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
'சார் சுட்டுட்டாங்க...15 நிமிடத்திற்குள் மூன்று அழைப்புகள்' - நியூயார்க் போலீஸை திடுக்கிட வைத்த செடான் கார்! - நியூயார்க் மாகாணத்தில் உள்ள புரூக்ளின் போரோ
நியூயார்க்: புரூக்ளின் போரோ பகுதியில் அடுத்தடுத்து 5 நபர்கள் மீது 15 நிமிட இடைவெளிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மாலை 6.31 மணிக்கு காவல் துறைக்கு அடுத்த அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், முன்பு துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்திலிருந்து சிறிது தூரத்தில் 19 வயதான மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்தது தெரியவந்தது. அதில், ஒருவருக்கு முழங்கையிலும், மற்ற இருவருக்கு காலிலும் முதுகிலும் காயம் ஏற்பட்டிருந்தது.
பின்னர், 2 நிமிடத்தில் மற்றொரு நபர் மீதும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக காவல் துறைக்கு கிடைத்தது. இதுதொடர்பாக நியூயார்க் காவல் துறை தலைவர் ரோட்னி ஹாரிசன், ”அனைத்து துப்பாக்கிச் சூடு சம்பவத்திலும் வெள்ளை நிறம் செடான் கார் ஒன்றுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கார் தொடர்பான விவரங்கள் தெரிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.