கரோனா வைரஸிற்கு எதிராக ஒரு பயனுள்ள சிகிச்சை முறையை கண்டுபிடிக்க உலக இனம் ஒரு தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்நிலையில் வின்டர் என்று பெயரிடப்பட்ட நான்கு வயது லாமாவின் (ஒட்டக வகையைச் சேர்ந்த சுமை தாங்கிச் செல்லும் மிருகம்), ஆன்டிபாடிகள் கோவிட்-19யை ஏற்படுத்தும் புதிய வைரஸ்களை நடுநிலையாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது.
வின்டர் பெல்ஜியத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி பண்ணையில் சுமார் 130 லாமாக்கள் மற்றும் அல்பாக்காக்களுடன் (ஒட்டக இனத்தைச் சார்ந்த ஒரு வகை விலங்கு) வாழ்கிறது. இவை மற்றவிலங்குளைப் போலவே, புதிய கரோனா வைரஸின் மேற்பரப்பைக் கவரும் ஸ்பைக்கி புரதங்களை பிணைக்க உதவும் ஒரு சிறப்பு வகை நோயெதிர்ப்பு ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.
இதன் மூலம் அது வைரஸின் விளைவை நடுநிலைப்டுத்துகிறது என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செவ்வாயன்று (07-05-2020) வெளியிட்ட செய்தியில், ஆய்வறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளது. இந்த ஆய்வு தொடக்க நிலையில் இருந்தாலும், கரோனா வைரஸால் ஏற்படும் நோயை குணப்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வின்டர் சாக்லேட் வண்ணத்தில் இருக்கும், நீண்ட கால்கள், சற்று சாய்ந்த காதுகள் மற்றும் அழகான கண்களை கொண்ட பெண் லாமா ஆகும். இதன் ஆன்டிபாடிகள் நானோ பாடிஸ் என்று அழைக்கப்படும் ஒரு முக்கிய வகை. அமெரிக்காவின், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம், தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள ஏஜென்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஆய்வக எலிகளை கரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்திற்கு உட்படுத்துகின்றனர்.
பாரம்பரிய ஆன்டிபாடி மருந்துகளை அடையாளம் காண கோவிட்-19 இல் இருந்து மீண்ட மக்களின் ரத்தத்தை ஆய்வு செய்கின்றனர். 2016 ஆம் ஆண்டில், கரோனா வைரஸ்களுக்கான உலகளாவிய தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, மெர்ஸ் மற்றும் கரோனா வைரஸ் ஆகியவற்றிற்கு நோய்த்தடுப்பு மருந்து கிடைத்தது.
இது குறித்து டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் இணை ஆசிரியரும் பட்டதாரி மாணவருமான டேனியல் ரேப் கூறுகையில், “அவர்கள் அதன் ரத்தத்தை எடுத்து ஆன்டிபாடிகளை தனிமைப்படுத்தினர். அவற்றில் ஒன்று மெர்ஸ் கரோனா வைரஸை (MERS-CoV) நடுநிலையாக்குவதற்கான திறனைக் காட்டியது. கரோனா வைரஸூக்கு எதிராக போராட்டத்தில் ஒரு முழுமையான தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்து கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தோம்.