தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் உயிரிழப்பு! - இந்திய வம்சாவளியினர் பலி

வாஷிங்டன்: கிழக்கு புருன்ஸ்விக் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி உட்பட மூன்று இந்தியர்கள் நீச்சல் குளத்தில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

america dead
america dead

By

Published : Jun 25, 2020, 2:30 AM IST

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள கிழக்கு புருன்ஸ்விக் பகுதியில் இந்தியர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, அவரின் தாயார் நிஷா பட்டேல் (33). நிஷாவின் மாமனாரான பாரத் பட்டேல் (62) ஆகியோர் தங்களின் வீட்டின் பின்புறத்தில் உள்ள நீச்சல் குளத்தில் சந்தேகிக்கும் விதமாக இறந்து சடலமாக கிடந்துள்ளனர்.

நிஷாவின் வீட்டிலிருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டதாக, அவர்களின் பக்கத்து வீட்டினர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

உடனே சம்பவம் குறித்து அறிந்து கிழக்கு புருன்ஸ்விக் காவல் துறையினர் குளத்தில் மூழ்கியிருந்தவர்களை மீட்டு முதலுதவி அளித்துள்ளனர். அவர்கள் உயிரிழந்திருந்ததால் அது பயன் அளிக்கவில்லை, தொடர்ந்து அவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த 20 நாள்களுக்கு முன்புதான், இந்தக் குடும்பம் இங்கு குடிபெயர்ந்து வந்ததாகவும் இவர்களின் இறப்பு அப்பகுதியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் உயிரிழப்பு!

இதையும் படிங்க:விமானத்திலேயே உயிரிழந்த பயணி - கரோனா பாதிப்பு காரணமா?

ABOUT THE AUTHOR

...view details