அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது, 'ஒபாமாகேர்' என்ற காப்பீட்டு திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் குறைந்த வருமானம் கொண்டவர்களும் மருத்துவ காப்பீட்டு வசதியை பெற முடிந்தது.
ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சியை அதிபரான ட்ரம்ப் ஒபாமாகேர் திட்டத்தை ரத்து செய்தார். அந்தத் திட்டம் போதிய பலன் அளிக்கவில்லை என்று கூறிய ட்ரம்ப், அதற்கான மாற்று திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், நான்கு ஆண்டுகளில் அதுபோன்ற எந்தவொரு திட்டத்தையும் ட்ரம்ப் அறிவிக்கவில்லை.
அமெரிக்காவின் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி மற்றும் நியூயார்க்கின் சிட்டி யுனிவர்சிட்டியின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ட்ரம்ப் அதிபராக இருந்த கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் மருத்துவ காப்பீட்டை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.