தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சிறைச்சாலையில் கலவரம் - 29 கைதிகள் பலி! - 29 பேர்

கராகஸ்: வெனிசூவேலாவில் சிறையில் கைதிகளுக்கிடையே வெடித்த கலவரத்தில் 29 பேர் கொல்லப்பட்டனர். சிறைக் காவலர்கள் 19 பேர் பலத்த காயமடைந்தனர்.

29 கைதிகள் பலி!

By

Published : May 25, 2019, 5:06 PM IST

Updated : May 25, 2019, 5:52 PM IST

அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தில் உள்ள வெனிசூவேலாவில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போர்த்துக்கீச மாகாணத்திலுள்ள சிறை ஒன்றில் சலுகைகள் வழங்கவேண்டி கைதிகளுக்கிடையே திடீரென ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.

இந்த கலவரத்திற்கு நடுவே மூன்று வெடிகுண்டுகளை கைதிகள் வெடிக்கச் செய்தனர். இதில், 19 சிறைக் காவலர்கள் பலத்த காயமடைந்தனர். மேலும், இந்தக் கலவரத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற கைதிகளை தடுக்க காவல் துறையினர் மேற்கொண்ட முயற்சியில் 29 கைதிகள் கொல்லப்பட்டனர்.

சில ஆண்டுகளாகவே வெனிசூவேலாவில் வன்முறை காரணமாக கைதிகள் உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : May 25, 2019, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details