தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனாவுக்குப்பின் அமெரிக்காவில் 2.6 கோடி பேர் வேலையிழப்பு - அமெரிக்காவில் 2.6 கோடி பேர் வேலையிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் சுமார் 2.6 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

job
job

By

Published : Apr 23, 2020, 8:09 PM IST

உலகளவில் கரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில்தான் அதிகமாக உள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு சுகாதார சீர்கேட்டுடன், அந்நாட்டில் தீவிரமான பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக நடவடிக்கை முடங்கி வேலையிழப்பு தீவிரமடைந்துள்ளதால் இந்த அசாதாரண சூழலை சமாளிக்க முடியாமல் அமெரிக்க அரசு திணறிவருகிறது. 1930ஆம் ஆண்டு ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையைக் காட்டிலும் தற்போதைய பொருளாதார சரிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா தாக்கத்திற்கு பின்னர் இதுவரை 2.6 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. வரும் காலங்களில் இந்த பாதிப்பு மேலும் தீவிரமடையும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் நோய் தொற்று எண்ணிக்கை எட்டு லட்சத்தை தாண்டியுள்ளதால் மீண்டும் தொழில்துறைகளை இயங்க அனுமதித்தாலும், அதிகளவிலான ஊழியர்களை பணியமர்த்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே, இந்த வேலையிழப்பு எண்ணிக்கை இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோவிட்-19 : இரண்டாம் அலைக்குத் தயாராகும் தென் கொரியா !

ABOUT THE AUTHOR

...view details