தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வெனிசுலாவில் ஊடுருவ முயன்ற அமெரிக்கர்கள் கைது! - நிக்கோலா மதுரோ

கராகஸ்: வெனிசுலாவில் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற இரண்டு அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் நிக்கோலா மதுரோ தெரிவித்துள்ளார்.

Venezuelan President Nicolas Maduro
Venezuelan President Nicolas Maduro

By

Published : May 5, 2020, 4:24 PM IST

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்துவருகிறது. இந்நிலையில், வெனிசுலா நாட்டில் சட்டவிரோதமாக கரீபியன் கடல் வழியே ஒரு கும்பல் ஊடுருவ முயன்றுள்ளது.

இந்த முயற்சியை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாகவும், தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும் வெனிசுலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் சில்வர்கார்ப் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த அயரன் பெர்ரி(41), லூக் டென்மன்(34) ஆகியோரை கைது செய்துள்ளதாகவும் வெனிசுலா தெரிவித்துள்ளது.

அதற்கு ஆதாரமாக அவர்களின் பாஸ்போர்ட்களையும் வெனிசுலா அதிபர் நிக்கோலா மதுரோ செய்தியாளர் சந்திப்பில் காட்டினார். வெனிசுலா தலைநகர் கராகஸ் நகருக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லா குயிரா துறைமுகத்தில் இந்த ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது.

வெனிசுலாவில் தற்போது நடைபெற்றுவரும் ஆட்சியைக் கலைக்க இந்த ஊடுருவல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஊடுருவலுக்கு கொலம்பியா, அமெரிக்கா அரசுகளே காரணம் என்றும் வெனிசுலா குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு இரு நாடுகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெனிசுலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உலகில் நிலவிவரும் விரோதப் போக்கை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் விடுத்த அழைப்பை புறக்கணித்து, இந்த ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிரிய ராணுவக் கிடங்குகள் மீது தாக்குதல் : இஸ்ரேல் மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details