அமெரிக்காவின் ஒமாஹா நகரத்தில் புத்தாண்டை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், எவான்ஸ் அரங்கில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்நபரை சுட்டுத் தள்ளினர். அப்போது, காவல் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து காவல் துறை தரப்பு கூறுகையில், "துப்பாக்கிச்சூட்டின் காரணம் என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அரங்குக்கு உள்ளே ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திவருகிறோம். காயம் ஏற்பட்ட காவலரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவர் அபாய நிலையில்தான் உள்ளார்" எனத் தெரிவித்தது.