அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கதை ஆகியுள்ளன. இதனை கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு கரோலினா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி!
சார்லோட்: அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
இந்நிலையில், சார்லோட் நகரிலுள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் கையில் துப்பாக்கியுடன் வந்த நபர், மாணவர்களைக் குறிவைத்து சரமாரியாக சுட்டார். இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.