கலிபோர்னியா சேக்ரமெண்டோவிலிருந்து வடக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெட் பிளப் பகுதியில் வால்மார்ட் விநியோக மையம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென்று விநியோக மையத்திற்குள் தானியங்கி துப்பாக்கியுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இத்தாக்குதலில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்த ரெட் பிளப் காவல் துறையினர், குற்றவாளி சரணடைய மறுத்ததால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதில், பல ஊழியர்களும் மக்களும் துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் அறைக்குள் சென்று மறைந்து கொண்டதால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. படுகாயம் அடைந்தோர் செயின்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க :மனித தொடர்பில்லாமல் டெலிவரி செய்யும் ரோபோட்ஸ்!