ஜூன்டீன்ந்து (juneteenth) விழாவின் தொடர்ச்சியாக, நடைபெற்ற ஒரு கொண்டாட்டத்தின் போது அடையாளம் தெரியாத சிலர், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் உயிரிழந்தும், ஏழு பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு கரோலினாவில் துப்பாக்கிச் சூடு: இரண்டு பேர் உயிரிழப்பு, ஏழு பேர் படுகாயம்!
சார்லோட்: வடக்கு கரோலினாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தும், ஏழு பேர் காயமடைந்தும் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சார்லோட்-மெக்லென்பர்க் காவல்துறை துணைத் தலைவர் ஜானி ஜென்னிங்ஸ் (Johnny Jennings) செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஜூன்டீன்ந்து கொண்டாட்டத்தின்போது, அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டு, ஏழு பேர் படுகாயமடைந்தனர். மேலும் இச்சம்பவத்தின்போது அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் இருந்ததால், குற்றவாளி யார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க அவரச சேவைகள், வரவழைக்கப்பட்டு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி எறிந்தோம். அப்போது சிதறி ஓடிய மக்கள் காவல் துறை வாகனத்தின் மீது மோதியதில், ஐந்து பேர் படுகயமடைந்தனர். இருப்பினும் கூட்டத்திலிருந்த பலரை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகித்தாலும், நாங்கள் யாரையும் இன்னும் கைது செய்யவில்லை' என்று தெரிவித்துள்ளார்.