மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள ஹோண்டுராஸ் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் 18 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 18 பேர் கொலை! - புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 18 பேர் கொலை
டெகுச்சிகாஎல்பா: ஹோண்டுராஸ் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 18 பேர் கொலை செய்யப்பட்டனர்.
Honduras
இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2019ஆம் ஆண்டு, நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 24 பேர் கொல்லப்பட்டனர். அதனை ஒப்பிடுகையில் இந்த முறை குறைவாகவே பதிவாகியுள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டு, 3,482 வன்முறை தொடர்பான படுகொலைகள் நிகழ்ந்தன. 2019ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 82 படுகொலைகள் பதிவாகின. 2020ஆம் ஆண்டு, ஒரு லட்சம் பேரில் 37 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2019ஆம் ஆண்டு, ஒரு லட்சம் பேரில் 44 பேர் படுகொலை செய்யப்பட்டனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.