தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தெற்கு சூடானில் சிறப்பான சேவை: ஐ.நா. பதக்கங்கள் பெற்ற 135 இந்தியர்கள் - இந்தியா அமைதி காத்தல்

தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பணியில் பணியாற்றும் 135 இந்திய அமைதி காக்கும் படையினர் ஜொங்லீ மாகாணத்திலும் பெருநகர பிபோர் நிர்வாகப் பகுதியிலும் சிறப்பான சேவைக்காக ஐ.நா. பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

தெற்கு சூடானில் சிறப்பான சேவை: ஐ.நா. பதக்கங்கள் பெற்ற 135 இந்தியர்கள்
தெற்கு சூடானில் சிறப்பான சேவை: ஐ.நா. பதக்கங்கள் பெற்ற 135 இந்தியர்கள்

By

Published : Jun 15, 2021, 8:46 AM IST

நியூயார்க்: தென் சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பணியில் பணியாற்றும் 135 இந்திய அமைதி காக்கும் படையினர் ஜொங்லீ மாநிலத்திலும் பெருநகர பிபோர் நிர்வாகப் பகுதியிலும் சிறப்பான சேவைக்காக ஐ.நா. பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

தென் சூடானில் உள்ள ஐ.நா. மிஷன் (யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ்) வெளியிட்ட அறிக்கையின்படி, 135 இந்தியர்கள், 103 இலங்கையினர் பதக்கங்களைப் பெற்றனர் என்பது தெரியவருகிறது.

"இந்தச் சவாலான சூழலில் யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ். ஆணையை நிறைவேற்றுவதற்காக இந்த அலுவலர்கள் செய்த பங்களிப்புகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று அமைதி காக்கும் பணியின் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷைலேஷ் தினாய்கர் கூறினார்.

இந்திய துருப்புக்கள் போர், பிபோர், அகோபோவில் ஒரு தற்காலிக இயக்கத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் கால்நடை முகாம் போன்ற சிவில்-ராணுவ ஒத்துழைப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என்று யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் மொத்தம் 49 அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இந்தியா பங்கேற்று இந்திய வீரர்கள் 157 பேரை இழந்துள்ளது.

தெற்கு சூடானில் சிறப்பான சேவை: ஐ.நா. பதக்கங்கள் பெற்ற 135 இந்தியர்கள்

"இந்த நாளில் தகுதியான பதக்கங்களைப் பெறும் அனைத்து ராணுவ வீரர்களிடையேயும் அமைதி நிலவ வேண்டும் என்ற விருப்பத்தை நான் பாராட்டுகிறேன்" என்று துறை கிழக்கு தளபதி பிரிகேடியர் ஜெனரல் தீபக் குமார் பனியா கூறினார்.

"நீங்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கடந்துவிட்டீர்கள்.

உங்கள் நாட்டிலிருந்து விமானிகள் இருக்க வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்ப்பதுபோல் நீங்கள் தைரியமாகவும் உறுதியுடனும் இருந்தீர்கள்" என்று இலங்கை விமானப் பிரிவைச் சேர்ந்த தினாய்கர் கூறினார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details