புளோரிடா நாட்டில் அமைந்துள்ள கடற்கரையில் கடல் ஆமை ஒன்று கம்போ லிம்போ நேச்சர் நிலையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சோர்வாக இருந்த அந்தக் கடல் ஆமை சிறிது நேரத்திலே பரிதாபமாக உயிரிழந்தது.
உயிரிழந்த ஆமையின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துகள்கள்... - viralnews
டலஹாசி: உயிரிழந்த கடல் ஆமையின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துகள்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதனையடுத்து உயிரிழந்த ஆமையைப் பரிசோதித்த மறுத்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆமையின் வயிற்றைக் கிழித்தபோது அதில் 104 பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளது தெரியவந்தது. இவற்றை ஆமை கடலில் நீந்தும்போது சாப்பிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது சமூக வலைத்தளங்களில் ஆமை அருகில் 104 பிளாஸ்டிக் துகள்கள் இருக்கும் புகைப்படம் காட்டுத்தீ போல் பரவிவருகிறது. இதற்கு சமூக ஆர்வாளர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்
இச்சம்பவம் குறித்து கடல் ஆமை மறுவாழ்வு உதவியாளர் கூறுகையில்," ஆமை பலவீனமாகவும் சோர்வுடனும் இருந்தது. அது சரியாக இல்லை என்று என்னால் சொல்ல முடியும். பரிசோதித்தபோது அதன் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துகள்கள், பாட்டில் மூடிகள் முதல் பலூன்கள் வரை இருப்பது தெரியவந்தது. பிளாஸ்டிக்கை சாப்பிட்டதும் வயிறு நிறைந்த உணர்வு ஆமைகளுக்கு ஏற்படுகிறது. இதன் விளைவாக அவை சரியாகச் சாப்பிடாமல் தேவையான ஊட்டச்சத்தினை பெறுவதில்லை. இச்சம்பவம் உண்மையிலேயே மனம் உடைய வைக்கிறது. ஆனால் இது பல ஆண்டுகளாக நாங்கள் பார்த்த ஒன்று. மக்கள் தற்போதுதான் இந்த படங்களைப் பார்க்கிறார்கள். அது விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.பிளாஸ்டிக் மாசுபாட்டினால் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.