கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்த மாதம் வெகுவிமர்சையாகக் கொண்டாட பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இன்னும் ஒருமாதம் பண்டிகைக்கான நேரம் இருக்கும் நிலையில், 10 வயது சிறுமி தனக்கு தேவையான 26 பொருட்களின் பட்டியலை கடிதமாக எழுதி சாண்டா கிளாஸிடம் கேட்டுள்ளார். அந்த கடிதம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
கிறிஸ்துமஸ் லிஸ்ட் என்று தொடங்கும் அந்த கடிதத்தில், ஐபோன் 11, ஏர் பாட்ஸ், புதிய மேக் புக் ஏர், மேக் அப், பெர்ஃப்யூம், ஷூ, கோ - ப்ரோ, 4 ஆயிரம் டாலர் பணம் என பட்டியல் நீள்கிறது.